உள்நாடு

ரிஷாதின் அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர், உயர்நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை, எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுவிக்க உத்தரவிடுமாறு கோரி, அவர்களினால் குறித்த மனு தாக்கல் செய்யட்டுள்ளது.

அந்த மனு, நீதியரசர்களான, எல்.ரி.பி. தெஹிதெனிய, ப்ரிதி பத்மன் சூரசேன மற்றும் ஷிரான் குணரத்ன முதலான மூவரடங்கிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில், இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ள செந்தில் தொண்டமானின் உரை!

பிரதமர் மஹிந்த குருநாகல் மாவட்டத்தில் இருந்து தேர்தலுக்கு