உள்நாடு

ரிஷாட் மீது வழக்குத் தொடருங்கள் இல்லையென்றால் விடுவியுங்கள் – ரணில்

(UTV | கொழும்பு) –  பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தொடர்பில் இன்றைய பாராளுமன்ற அமர்வில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியிருந்தார்.

“பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். ரிஷாதிற்கு எதிராக சாட்சிகள் இருந்தால், வழக்கு தாக்கல் செய்யுங்கள். சாட்சிகள் இல்லையென்றால் அவரை விடுதலை செய்யுங்கள். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்து தடுப்புக்காவலில் வைக்க அது தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் இருக்க வேண்டும். அவர் தொடர்பில் எடுக்கும் நடவடிக்கை குறித்து சட்டமா அதிபரிடம் கேளுங்கள்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாராளுமன்ற உறுப்பினரை தடுப்புக்காவலில் வைத்திருப்பது நிலுவையில் உள்ள சாட்சிகளுக்கு இடையூறாக இருப்பார் என்று, அவ்வாறு இன்றி சாட்சிகள் இருந்தால் முன்வையுங்கள். இந்த சபையின் உறுப்பினர் ஒரு வழக்கொன்றில் சிக்கியிருப்பது ஒரு பெரிய பிரச்சினை. அது தொடர்பான ஆதாரம் இருந்தால், பாராளுமன்றத்திற்கு தெரிவிக்கவும். நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தி சாட்சிகளை சபையில் முன்வையுங்கள்..

‘ஆணைக்குழு அறிக்கையில் ஒரு பகுதி அறிக்கையிடப்படவில்லை. முழுமையான அறிக்கையினை பாராளுமன்றில் சமர்ப்பியுங்கள். ரிஷாத் பதியுதீன் தொடர்பில் பாராளுமன்றுக்கு உண்மையினை வெளிப்படுத்துங்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

Related posts

இரண்டு மணி நேரத்தில் மின் வெட்டு சரி செய்யப்படும்

உள்ளூர் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கப்பட மாட்டாது

1000க்கும் மேற்பட்ட விளம்பரங்களை நீக்கிய யூடியூப்!