அரசியல்உள்நாடு

ரிஷாட் பதியுதீனின் தலைமையே வடபுல மக்களுக்கு வழிகாட்டும் – குரங்குகளைப்போல தாவுவோருக்கு தலைமை தயவுகாட்டக் கூடாது

உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் எங்களை விட்டுச் சென்றாலும் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீனுடன் உறுதியாகச் செயற்பட்டு, சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதி செய்யவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபை, மன்னார் நகர சபை, முசலி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள் தெரிவித்தனர்.

மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர், முசலி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் எஸ்.எம்.பைரூஸ், இன்னும் சபையின் முன்னாள் உறுப்பினர் வாஹித் மற்றும் மன்னார் நகர சபை முன்னாள் உறுப்பினர் நவ்சீன் உள்ளிட்ட ஏனைய முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள் தெரிவித்ததாவது;

“எமது கட்சியின் முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் கட்சி மாறவில்லை. மாறாக குரங்குகள் போல, அங்கும் இங்கும் தாவித்திரிகின்றனர். ரணில் விக்ரமசிங்க தோற்றவுடன் மீண்டும் எம்மிடமே இவர்கள் வருவர். இதற்கு முன்னரும் இவ்வாறு இவர்கள், தாவித்தாவியே திரிந்தனர்.

கட்சித் தலைமை இனியும் இவ்விடயத்தில் தயவு காட்டக்கூடாது. நாலாம் கட்டை அருவி ஆறு தொடக்கம் மறிச்சுக்கட்டி வரைக்கும், மறிச்சுக்கட்டியிலிருந்து அரிப்பு வரைக்குமான எமது மீள்குடியேற்றத்தில், எமது தலைவர் ரிஷாட் பதியுதீன் கடுமையாக உழைத்தார்.

காடுகளை அழித்து, துப்புரவுப் பணிகளை முன்னெடுத்த காலத்தில் ஏற்பட்ட இடர்களை இல்லாது ஒழித்தவர் எமது தலைவர் ரிஷாட் பதியுதீன். வீடுகளை நிர்மாணித்து, வீதிகளைப் புனரமைத்ததுடன் வாழ்வாதார உவிகளை வழங்கினார்.

எமது பிராந்திய முன்னேற்றத்துக்கு இந்தத் தலைமையே வேண்டும். எங்களோடு இருந்து எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டு, எச்சில் ஆசைகளுக்காக சிலர் கட்சிக்குத் துரோகம் இழைத்துள்ளனர்.

இவர்களுக்கு இனிமேலும் மன்னிப்போ அல்லது கருணையோ காட்டக்கூடாதெனக் கோருகிறோம்” என்று தெரிவித்தனர்.

-ஊடகப்பிரிவு

Related posts

இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் – 13 பிரதிவாதிகளுக்கும் பிணை [VIDEO]

ஹங்கொட லொக்காவின் உதவியாளர்கள் இருவர் கைது

நிந்தவூர் கடல் அரிப்பை தடுக்க அதிகாரிகளுடன் உயர்மட்ட கூட்டம்