உள்நாடு

கண்டியில் ஐ.ம.ச வேட்பாளர்களுக்கு ம.காங்கிரஸ் ஆதரவளிக்க முடிவு

(UTV|கண்டி)- கண்டி மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடாததன் காரணமாகவே, இம்முறை பொதுத் தேர்தலில், கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க, ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க, மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்டக் கிளை தீர்மானித்துள்ளதாக, மாவட்ட அமைப்பாளர் ஹம்ஜாட் ஹாஜியார் தெரிவித்தார்.

அதனடிப்படையில், மக்கள் காங்கிரஸ் தலைவரின் ஆலோசனையின் பேரில், கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் முன்னாள் அமைச்சர் ஹலீம் ஆகியோருக்கு, கட்சியானது ஆதரவளிக்க முடிவு செய்துள்ளது எனவும் கூறினார்.

ஊடகப்பிரிவு-

Related posts

மாகந்துரே மதூஷின் இரண்டாவது மனைவி திலினி கைது

கல்வி முறையில் ஏற்படப்போகும் முக்கிய மாற்றங்கள்!

நாடளாவிய ரீதியில் நாளை ஊரடங்குச் சட்டம் அமுலில்