கேளிக்கை

ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா

(UTV|INDIA)-தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் ‘வட சென்னை,’ ‘மாரி-2’ படங்கள் திரைக்கு வந்தன. 2 படங்களையுமே ரசிகர்கள் கொண்டாடினார்கள். அடுத்ததாக தனுஷ் நடிப்பில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீசாக இருக்கிறது. நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில், படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கும் இந்த படத்தில், தனுசுடன் மேகா ஆகாஷ், சசிகுமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். படத்தொகுப்பு, பின்னணி இசை சேர்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தை மிக விரைவில் திரைக்கு கொண்டு வரும் முயற்சியில், இயக்குநர் கவுதம் மேனன் இரவு-பகலாக ஈடுபட்டு இருக்கிறார்.
படம் கோடை விடுமுறையில் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார்.
தனுஷ் தற்போது, வெற்றிமாறன் இயக்கத்தில் `அசுரன்’ படத்தில் நடித்து வருகிறார். ராம்குமார், துரை செந்தில்குமார் இயக்கத்திலும் அடுத்தடுத்து நடிக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அத்துடன் வரலாற்று படமொன்றையும் இயக்கி நடிக்கிறார்.

Related posts

‘ஜகமே தந்திரம்’

தனுஷை பென்டெடுக்கும் பிரபுதேவா

கரீனா கபூர் நிறைமாத கர்ப்பிணியாக