சூடான செய்திகள் 1

ராவணா எல்ல நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்ல வேண்டாம்…

(UTV|BANDARAWELA)-இலங்கையில் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் ராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் ஆபத்து நிலைமை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

பண்டாரவளையில் தற்போது நிலவும் அடைமழை காரணமாக ராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் பாரிய அளவு நீர் பெருக்கெடுக்க ஆரம்பித்துள்ளது.

இதன் காரணமாக ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் பாரிய அளவு நீர் அதிகரித்துள்ளதுடன் ஏனைய நாட்களை விடவும் அதிக நீர் வெளியேறி செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர்.

அவ்வாறு யாரும் செல்ல வேண்டாம் என பொலிஸார் எச்சரித்துள்ளனர். குளிக்க சென்றால் உயிர் ஆபத்துக்கள் ஏற்பட கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் அந்த பகுதிக்கு செல்வதனை தற்போது தவிர்க்குமாறு சுற்றுலா பயணிகளிடம் பொலிஸார் கேட்டு கொண்டுள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சிவப்பு அறிவித்திலை விடுத்துள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

நாடளாவிய ரீதியில் மீளவும் இன்று முதல் ஊரடங்கு அமுலுக்கு

கொட்டாஞ்சேனையில் வீதி ஒன்றுக்கு பூட்டு