விளையாட்டு

ராணி எலிசபெத் மரணம் : டெஸ்ட் போட்டி ஒத்திவைப்பு

(UTV |  இலண்டன்) – இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் தனது 96-வது வயதில் நேற்று உயிரிழந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரல் பண்ணை வீட்டில் ராணி 2-ம் எலிசபெத் உயிரிழந்ததாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி அந்நாட்டுடன் ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

அந்த வகையில் இரு நாடுகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இலண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக இரத்து செய்யப்பட்டது.

இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் மரணம் அடைந்ததையடுத்து இன்று நடைபெறவிருந்த இங்கிலாந்து – தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டம் ஒத்திவைக்கப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆட்டம் மீண்டும் தொடங்கும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சவூதி அரேபியா வெற்றியை சுவீகரித்தது

விராட் கோலியின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டி இன்று