கேளிக்கை

ராணா திருமணம் – விருந்தினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

(UTV|இந்தியா ) – நடிகர் ராணாவின் திருமணத்துக்கு வரும் விருந்தினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகுபலி புகழ் ராணா டகுபதி ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார்.

ராணாவுக்கும் ஐதராபாத்தை சேர்ந்த மிஹீகா பஜாஜ் என்ற பெண் தொழில் அதிபருக்கும் திருமணம் முடிவாகி உள்ளது.

நாளை நடைபெறவுள்ள இவர்களது திருமனத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரும் கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்பதை உறுதி செய்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திருமணத்தில் தெலுங்கு நடிகர்கள் பிரபாஸ், வருண் தேஜ், ராம்சரண் உள்பட பலர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

ஹரிஷ் கல்யாண் – ரைசாவின் காதல் சர்ப்ரைஸ்

மீண்டும் திரைக்கு வரும் காட்ஸிலா?

ஆபாச காட்சியில் காஜல்