வகைப்படுத்தப்படாத

ராஜகிரிய மேம்பாலத்தின் பணிகள் விரைவில் பூர்த்தி

(UDHAYAM, COLOMBO) – ராஜகிரிய மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகளில் தற்சமயம் 65 சதவீதமான நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகியுள்ளன.

இவ்வார இறுதிக்குள் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என்று செயற்றிட்டப் பணிப்பாளர் பிரியல் வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

540  மீற்றர் நீளமான ராஜகிரிய மேம்பாலம் நான்கு பாதைகளை கொண்டதாகும். இதற்கென 450 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது.ஸ்பெயின் அரசாங்கம் சலுகை அடிப்படையிலான கடனை இதற்காக வழங்கியுள்ளது.

நிர்மாணப் பணிகள் அடுத்த ஆண்டில் பூர்த்தியாகும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், நவீன தொழில்நுட்பம், ஒப்பந்தக்காரர்களின் வினைத்திறன் என்பனவற்றினால் விரைவான முறையில் பணிகளை பூர்த்தி செய்யும் வாய்ப்பு கிடைத்திருப்பதாக பணிப்பாளர் கூறினார்.

இரவு – பகலாக இந்தப் பாலம் நிர்மாணிக்கப்பட்டுவருகிறது.

Related posts

Disney star Cameron Boyce dies at 20

தாக்குதல் நடத்த தயாராகும் பிரான்ஸ்

4 மணி வரை நடைபெறவுள்ள இன்றைய விவாதம்