சூடான செய்திகள் 1

ராஜகிரிய பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலுக்காக இன்று வேட்பு மனு தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் ராஜகிரிய மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வாகன போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அதிகாரி ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்று காலை 6 மணி முதல் குறித்த வாகன போக்குவரத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தன கோட்டை வீதியின் ஆயூர்வேத சுற்றுவட்டத்தில் இருந்து வெலிக்கடை சந்திவரையிலும் கொழும்பில் இருந்து வாகனங்கள் வெளியில் செல்ல முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஸ்ரீ ஜயவர்தன கோட்டை வீதி ஊடாக கொழும்புக்குள் உள்நுழையும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் பழைய கொட்டாவ வீதி, வெலிக்கடை சந்தியில் இருந்து ஆயூர்வேத சுற்றுவட்டம் வரையான வீதியின் ஒரு மருங்கில் மாத்திரம் கொழும்புக்குள் வாகனங்கள் உட்பிரவேசிக்க காலை 6 மணி வரை மாத்திரம் அனுமதியளிக்கப்படவுள்ளது.

அதேபோல் கொழும்பில் இருந்து வெளிச்செல்லும் வாகனங்கள் பழைய கொட்டாவ வீதியின் இடது புறத்தில் உள்ள இரண்டு மருங்குகளிலும் பயணித்து கொழும்புக்கு வெளியில் செல்ல முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாகன போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 500 மேற்பட்ட பொலிஸாரும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 1200 க்கும் அதிகமான பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

காலி நகரின் நீர் விநியோகம் தடை

27 வகையான மருந்துகளின் விலை குறைக்கப்படும்

சேனா படைப்புழுவைக் கட்டுப்படுத்த 5 வகையான கிருமிநாசினிகள்