விளையாட்டு

ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா

(UTV |  புதுடெல்லி) – இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிடுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆசிய கோப்பை 20 ஓவர் தொடரில் பங்கேற்க துபாய் செல்லும் இந்திய அணி வீரர்களுடன் ராகுல் டிராவிட் செல்லமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா தனது முதல் போட்டியில் ஒரே பிரிவில் அங்கம் வகிக்கும் பாகிஸ்தான் அணியுடன் 28ம் திகதி துபாயில் லீக் சுற்றில் மோதுகிறது.

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான்

Related posts

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் பெயர் மாற்றம்

ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள்

9 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார் திமுத்