உள்நாடு

ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது தாக்குதல் – 04 பேர் காயம்

(UTV |  கம்பஹா) – இன்று காலை இனந்தெரியாத குழுவினரால் நடத்திய தாக்குதலில் ராகம மருத்துவ பீட மாணவர்கள் நால்வர் காயமடைந்துள்ளனர்.

இவர்களில் மூவர் ராகம வைத்தியசாலையிலும் ஒருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ராகம மருத்துவ பீடத்தின் நான்காம் வருட மாணவர்கள் குழுவொன்றே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை மக்களுக்கு வழங்குங்கள் – சவூதி தூதுவர் அநுர அரசிடம் கோரிக்கை

editor

லொஹான் ரத்வத்தே மனைவிக்கு மீண்டும் விளக்கமறியல்

editor

போதைப்பொருளுடன் மூவர் கைது