கிசு கிசு

ராகம கொரோனா நோயாளி தப்பியோட்டம் – நோயாளி பொது போக்குவரத்தில் – முதற்கட்ட விசாரணை ஆரம்பம்

(UTV | கொழும்பு) – ராகம வடக்கு கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று காய்ச்சல் காரணமாக வைத்தியாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த நபருக்கு இரவு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான பரிசோதனை முடிவு இன்று காலை கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிய அந்துள்ளது. எனினும் குறித்த நோயாளி வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறு வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றவர் பேலியகொட பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடைய மதுபோதைக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நோயாளி பொது போக்குவரத்தினை பயன்படுத்தி தனது வீட்டிற்கு சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

தகவல் தெரிந்தால் குறித்த தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு கோரப்படுகின்றது 0112854880, 0112854885

இந்நிலையில், சீதுவை பொலிஸ் பிரிவிற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

மஹிந்த வைத்தியசாலையில்… – மறுக்கும் டுவிட்டர் பதிவு

1000 லீற்றர் மதுவை குடித்த எலி?

அரசியல் தீர்மானத்திற்கு தயாராகும் லொஹான் ரத்வத்த