உள்நாடு

ரஷ்ய விமான விவகாரம் : கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்

(UTV | கொழும்பு) – ரஷ்ய விமான சர்ச்சை பாரிய சேதத்தினை ஏற்படுத்துவதற்கு முன்னர் அதிகாரிகள் உடனடி தீர்வு காண வேண்டுமென அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

“ரஷ்ய விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார ரீதியாகவும் பெரிய சேதம் ஏற்படும் முன் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்..” அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

கெஸ்பேவ, கொரக்கபிட்டியவில் இன்று (04) இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts

DIG நுவன் மற்றும் DIG ரணசிங்க ஆகியோருக்கு இடமாற்றம்

பாதாள உலக குழுவுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரி கைது!

MT New Diamond – தீ வெற்றிகரமாக கட்டுப்பாட்டினுள்