உலகம்

ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 9,000 உக்ரைன் இராணுவ வீரர்கள் பலி

(UTV |  ரஷ்யா) – கடந்த பிப்ரவரி 24 அன்று உக்ரைன் நாட்டின் மீது ரஷியா படையெடுத்தது. தலைநகர் கீவ் உள்பட அந்நாட்டின் முக்கிய நகரங்களில் இரு தர்ப்பு படைகளும் கடும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த போரில் 9 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் ராணுவத் தலைவர் ஜெனரல் வலேரி ஜலுஷ்னி தெரிவித்துள்ளார். ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் 5,587 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 7,890 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளனர்.

குறைந்தது 972 உக்ரைன் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நா.சபை குழந்தைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. புள்ளி விவரங்கள்தான் ஆனால் இந்த எண்ணிக்கை உண்மையில் மிக அதிகமாக இருக்கும் என்று யுனிசெஃப் நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரஸ்ஸல் தெரிவித்துள்ளார்.

இதனிடையே உக்ரைன் படைகள் நடத்திய தாக்குதலில் ரஷி 80,000 வீரர்களை இழந்துள்ளதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு- நீதிமன்றம் ஒத்திவைப்பு

5 ஜி ரோபோக்களுடன் கொரோனா வைரஸ் வைத்தியசாலை

இந்தியாவில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு