வகைப்படுத்தப்படாத

ரஷ்ய தூதுவராலயத்திற்கு ஜனாதிபதி விஜயம்

(UTV|COLOMBO)-ரஷ்யாவின் கெமரோவா நகரில் அமைந்துள்ள வர்த்தக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் சிறு பிள்ளைகள் உள்ளிட்ட பலரின் இறப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ரஷ்ய தூதுவராலயத்திற்கு நேற்று பிற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி, அங்குள்ள நினைவுக் குறிப்பேட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்க்கு விசேட குறிப்பொன்றின் ஊடாக தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

 

இதுபோன்றதொரு துயரமான சந்தர்ப்பத்தில் இலங்கை அரசாங்கமும் மக்களும் தமது நட்பு நாடான ரஷ்ய அரசாங்கத்துடனும் மக்களுடனும் அவர்களது சோகத்தை பகிர்ந்து கொள்வதாக ஜனாதிபதி; தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் உறவினர்களுக்கும் தமது அனுதாபங்களை தெரிவித்த ஜனாதிபதி, இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திப்பதாக குறிப்பிட்டார்.

 

ரஷ்ய தூதுவராலயத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதியை இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மரேறி உள்ளிட்ட பணிக்குழாமினர் வரவேற்றனர்.

 

அதன் பின்னர் ஜனாதிபதி ரஷ்ய தூவருடன் சினேகபூர்வ கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Maximum security for Kandy Esala Perahara

பாரீசில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிக்கு 20 ஆண்டு சிறை

மேலும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ள மீதொட்டமுல்ல மக்கள்