உலகம்

ரஷ்ய அரசு நவல்னிக்கு எதிராக புதிதாக விசாரணைகள் ஆரம்பம்

(UTV | ரஷ்யா) -ரஷ்ய அரசாங்கத்தை விமர்சித்த அலெக்ஷி நவல்னிக்கு எதிராக புதிதாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அலக்ஷி நவல்னி பொதுமக்களிடமிருந்து கிடைத்த அன்பளிப்பை முறைகேடாக பயன்படுத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு பிரிவு தெரிவிக்கிறது. இது தொடர்பில் கடும் குற்றச்செயல்களின் கீழ் விசாரணைகள் இடம்பெறுவதாக ரஷ்ய குற்ற விசாரணை குழு தெரிவித்துள்ளது. அவர் 356 மில்லியன் ருபெலுக்கும் அதிகமான பண மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பொதுமக்களின் அன்பளிப்பாக கிடைத்த இத்தொகையினை அவர் தனது தனிப்பட்ட தேவைகளுக்காக பொருட்கள் மற்றும் சேவைகளை இப் பணத்த்தை செலவிட்டு பெற்றுக்கொண்டுள்ளார். அதிகளவு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக இப்பணத்தை அவர் பயன்படுத்தியுள்ளதாக ரஷ்ய விசாரணை பிரிவு தெரிவிக்கிறது. எவ்வாறெனினும் நவல்னிக்கு எதிராக மேற்கொள்ளப்படவுள்ள நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் சரியான தகவல்களை வழங்குவதில் ரஷ்ய அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது.

Related posts

துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி

இந்தியாவில் உயிரிழந்த இளைஞனுக்கு MonkeyPox

மொஸ்கோ அனைத்து வகையான விமான சேவைகளுக்கும் தடை விதிப்பு