உலகம்

ரஷ்யா – உக்ரைன் : நான்காவது சுற்று பேச்சுவார்த்தை ஆரம்பம்

(UTV |  உக்ரைன்) – ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தை தற்போது தொடங்கியுள்ளன.

இரு தரப்புக்கும் இடையேயான தொடர்புகள் கடினமாக உள்ளது என்றும், ஆனால் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறது என்றும் உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகரும் பேச்சுவார்த்தையாளருமான Mykhailo Podolyak ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தப்படும் பேச்சுவார்த்தையின் புகைப்படத்தை ட்வீட் செய்து, Podolyak இதை கூறினார்.

இந்த பேச்சுவார்த்தையில் ‘உடனடி’ போர் நிறுத்தத்தை உக்ரைன் கோருகிறது.

சண்டையை முடிவுக்குக் கொண்டுவர நடைபெறும் நான்காவது சுற்று பேச்சுவார்த்தையில்,

“அமைதி, உடனடி போர்நிறுத்தம் மற்றும் அனைத்து ரஷ்ய துருப்புக்களும் திரும்பப் பெறுதல் என்பவை முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்குப் பிறகுதான் பிராந்திய உறவுகள் மற்றும் அரசியல் வேறுபாடுகள் பற்றி பேச முடியும்” என்றும் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ அறிக்கையில் Podolyak தெரிவித்தார்.

Related posts

பிரபல பாலிவுட் பாடகர் KK காலமானார்

ட்விட்டர் நிறுவனத்திற்கு ரஷ்யா அபராதம்

லெபனானில் இலங்கை பெண்ணின் சடலம் மீட்பு!