உலகம்

ரஷ்யாவுக்கு உலகமே பதிலடி கொடுக்கும் – அமெரிக்கா

(UTV | வொஷிங்டன்) – உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் இராணுவ நடவடிக்கையை தொடங்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அனுமதி அளித்துள்ள நிலையில், சர்வதேச ரீதியிலாக ரஷ்யாகுக்கு கடும் அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அரச தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ரஷ்யா ஜனாதிபதி, அப்பகுதியில் உள்ள உக்ரைன் துருப்புக்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு உடனடியாக சரணடையுமாறு அழைப்பு விடுத்தார்.

இல்லையெனில் ஏற்படும் இரத்த வெள்ளத்திற்கு உக்ரைனே பொறுப்பேற்க வேண்டும் என்றும் ரஷ்ய ஜனாதிபதி வலியுறுத்தினார்.

உக்ரைன் இணைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும், அந்த நாட்டை யார் ஆட்சி செய்வது என்பதை உக்ரைன் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கிழக்கு உக்ரைன் மற்றும் தலைநகர் கியேவின் சில பகுதிகளில் இருந்து வரும் தகவல்கள், பெரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்கின்றன என்பதை உறுதிப்படுத்துகின்றன.

உக்ரைனில் இருந்து பிரிந்த இரண்டு பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக அங்கீகரிப்பதாக ரஷ்யாவின் ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, மோதலை முடிவுக்கு கொண்டு வந்து பேச்சுவார்த்தையை ஆரம்பிக்குமாறு ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ரஷ்ய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யாவுக்கு உலகமே பதிலடி கொடுக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அனைத்து மாநிலங்களும் உக்ரைன் மக்களுடன் இருப்பதாக அவர் வலியுறுத்துகிறார்.

அனைத்து நட்பு நாடுகளுடனும் ஒன்றிணைந்து ரஷ்யாவுக்கு பதிலளிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்தினார்.

Related posts

IS என்ற நபர்களை போலியாக காட்ட முனைந்த மற்றுமொரு சதி அம்பலம்!

பிரேஸிலில் ஒரே நாளில் 4,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

உலகளவில் 7 இலட்சத்தை கடந்த பலி எண்ணிக்கை