உள்நாடுசூடான செய்திகள் 1

ரஷ்யாவில் ஐபோனுக்கு தடை!

(UTV | கொழும்பு) –

அரசு துறை பணிகளுக்கு வெளிநாட்டு சாதனங்களை சார்ந்து இருப்பதை தடுக்கும் வகையில், அரசு அதிகாரிகள் ஆப்பிள் நிறுவன சாதனங்களை பயன்படுத்த ரஷ்யா அதிரடி தடை விதித்துள்ளது. திங்கள் கிழமை முதல் அரசு அதிகாரிகள் ஆப்பிள் நிறுவன ஐபோன் மற்றும் இதர சாதனங்களை பயன்படுத்தக் கூடாது என்று ரஷ்ய வர்த்தக துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஷ்யாவின் தொலை தொடர்பு, அரசு ஊடகத் துறை என்று அரசு துறையை சேர்ந்த அனைத்து நிறுவன ஊழியர்களுக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தும். ஏற்கனவே குறிப்பிட்ட சில நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஆப்பிள் நிறுவன சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருந்தனர்.

தற்போது இந்த பட்டியலில் அனைத்து அரசு அதிகாரிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

19 கோடி பெறுமதியான நகைகள், தங்க பிஸ்கட்டுகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களுடன் மூவர் கைது

ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு பிணை

அமித் வீரசிங்க உட்பட 8 பேர் மீண்டும் விளக்கமறியலில்…