உள்நாடு

ரஷ்யாவில் இருந்து நாடு திரும்பிய ​மேலும் 181 இலங்கையர்கள்

(UTV | கொழும்பு) –ரஷ்யாவில் சிக்கியிருந்த மேலும் 181 இலங்கையர்கள் இன்று (25) காலை நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் ரஸ்யாவின் மஸ்கட் நகரிலிருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் – 1206 இலக்க விமானத்தில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

நாட்டை வந்தடைந்துள்ள 181 பேருக்கு கிருமி ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அனைவரும் விசேட பேரூந்துகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கு முதல் கடந்த 22 ஆம் திகதி ரஷ்யாவின் மொஸ்கோவில் சிக்கியிருந்த 260 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டிருந்தனர்.

Related posts

இன்று முதல் 11 இடங்களில் Rapid Antigen பரிசோதனை

வாகனங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த சகல எரிபொருள் வரையறைகளும் நீக்கம

யாரும் குழப்பமடைய வேண்டாம் – வாகன இறக்குமதி சங்கத்தின் முக்கிய அறிவிப்பு

editor