உலகம்

ரஷ்யாவில் அரசாங்க ஊழியர்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சி!

(UTV | கொழும்பு) –

ரஷ்யர்களில் பலரும் ஐ-போன் மற்றும் ஐ-பேடு சாதனங்களை மிகவும் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர்கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்ரவரியில் ரஷ்யா அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது.
இதனை எதிர்த்து அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் போரிட்டு வருகிறது. உக்ரைன் ஆக்ரமிப்பை அடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆப்பிள் நிறுவனம் ரஷ்யாவிலிருந்து வெளியேறியதுடன் விற்பனையையும் நிறுத்தியது.

எனினும், வேறு நாடுகளிலிருந்து ரஷ்யாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட ஐ-போன் 14 உட்பட பல மாடல்களை ரஷ்யர்கள் வாங்கி பயனபடுத்தி வந்தனர்.அமெரிக்காவின் ஒரு உளவு நடவடிக்கையின் விளைவாக ரஷ்யாவினரால் பயன்படுத்தப்படும் பல ஆயிரக்கணக்கான ஆப்பிள் நிறுவன சாதனங்கள் பாதுகாப்பை இழந்து விட்டதாக ரஷ்யாவின் முக்கிய உள்நாட்டு பாதுகாப்பு சேவை அமைப்பான எஃப்.எஸ்.பி. (FSB) 2 மாதங்களுக்கு முன் குற்றச்சாட்டியிருந்தது. ஆப்பிள் நிறுவனமும், அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமையும் இணைந்து இதனை செய்ததாக எஃப்.எஸ்.பி. தெரிவித்தது.

இதனையடுத்து ரஷ்ய டிஜிட்டல் மேம்பாட்டு அமைச்சு வெளியிட்டிருந்த ஒரு சுற்றறிக்கை அந்நாட்டு அரசாங்க ஊழியர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.’ஐபோன் மற்றும் ஐபேடு மூலமாக அமெரிக்கா, ரஷ்ய மக்களின் தகவல் தொடர்புகளை அறிந்து கொள்ளும் ஆபத்து இருக்கிறது. இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே ஐ-போன்கள் மற்றும் ஐ-பேடுகளை வேலை நோக்கங்களுக்காக ரஷ்ய அரசாங்க ஊழியர்கள் இனி பயன்படுத்தப்பட கூடாது. பணி யன்பாடுகளுக்கான செயலிகளை உபயோகப்படுத்தவும், வேலை சம்பந்தமான மின்னஞ்சல் பரிமாற்றத்தை செய்யவும், ஆப்பிள் நிறுவன ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளை பயன்படுத்த கூடாது.
தனிப்பட்ட தேவைகளுக்காக ஐ-போன்களைப் பயன்படுத்தலாம்’ என ரஷிய அரசாங்கத்தின் டிஜிட்டல் மேம்பாட்டுக்கான அமைச்சர் மக்சுட் ஷடேவ் (Maksut Shadaev) அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கலிபோர்னியாவின் டிக்டாக் தலைமை நிர்வாக அதிகாரி இராஜினாமா

உக்ரைன் உடனான போரை வழி நடத்த புதிய ராணுவ தளபதி

இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு தடை