உள்நாடு

ரஷ்யாவின் Sputnik V செவ்வாயன்று தாயகத்திற்கு

(UTV | கொழும்பு) – ரஷ்யாவின் Sputnik V கொவிட் தடுப்பூசியின் மற்றுமொரு தொகுதி எதிர்வரும் செவ்வாய் கிழமை இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதன்படி அடுத்த கட்டமாக 185,000 தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாகவும் அவர் ​மேலும் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் Sputnik V கொவிட் தடுப்பூசியை அவசர தேவைக்காக பயன்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்த நிலையில், Sputnik V கொவிட் தடுப்பூசியின் முதல் தொகுதி மே மாதம் 3 ஆம் திகதி இரவு இலங்கையை வந்தடைந்தது.

அதனடிப்படையில் முதல் தொகுதியில் 15,000 தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றது.

அதற்கமைவாக 7 மில்லியன் தடுப்பூசிகளை 69.65 மில்லியன் அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவருகிறேன் – அலி சப்ரி

editor

தொழில்நுட்ப கோளாறு – கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்.

இன்று முதல் பல்கலைக்கழகங்கள் திறப்பு