உலகம்

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு விஷம் கொடுக்கபட்டமை உறுதி

(UTV|ரஷ்யா) – ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவான்லியின் (Alexei Navalny) உடலில் விஷப்பொருள் கலந்துள்ளதாக ஜெர்மனி வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

அலெக்ஸி நவான்லி, விமான நிலையத்தில் பருகிய தேநீரில் விஷம் கலந்திருக்கலாம் என நவால்னியின் ஆதரவாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் அவரின் உடலில் நச்சுப் பொருளேதும் கலக்கவில்லை என இதற்கு முன்னர், நவான்லிக்கு சிகிச்சை வழங்கிய ரஷ்ய வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், நவாக்னி விடயத்தில் தலையிட்ட ஜெர்மனி தலைவர் ஏஞ்சலா மெர்க்கலும், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானும் தாங்கள் அவருக்கு உதவ தயாராக இருப்பதாக தெரிவித்ததையடுத்து அவர் ஜெர்மனிக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

நவான்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் எனினும் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை எனவும் ஜெர்மன் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

நச்சுப்பொருளினால் அவரின் நரம்புத் தொகுதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது

Related posts

சூடானில் 27 பாதுகாப்பு படையினருக்கு மரண தண்டனை

இந்தியாவில் ஊரடங்கு நீடிப்பு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2020 [LIVE]