உள்நாடு

´ரவி ஹங்ஸி´ போதைப்பொருட்களுடன் சிக்கியது

(UTV | கேரளா) – 300 கிலோ ஹெரோயினுடனும் ஆயுதங்கள் சிலவற்றுடனும் இலங்கையில் பதிவுச் செய்யப்பட்ட மீனவ படகு ஒன்றில் இருந்த 6 இலங்கையர்கள் இந்திய கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரள கடற்பகுதியில் வைத்தே இந்த படகும், படகில் இருந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய போதை பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளளது.

´ரவி ஹங்ஸி´ என்ற குறித்த மீனவ படகில் இருந்து 300 கிலோ 323 கிராம் பெறுமதியான ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் ஏ.கே.47 ரக 5 துப்பாக்கிகளும், 9 மில்லிமீட்டர் நீளமான 1000 துப்பாக்கி ரவைகளும் இதன்​போது கைப்பற்றப்பட்டுள்ளன.

அந்த படகில் இருந்து போலி ஆவணங்கள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கைதான 6 இலங்கை மீனவர்களும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொகை ஈரானில் இருந்து கொண்டுவரப்பட்டு குறித்த மீனவ படகில் உள்ளவர்களிடம் கையளிக்கப்பட்டிருக்கலாம் என இந்திய அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Related posts

மலேசியாவிலிருந்து நாடு திரும்பிய 178 மாணவர்கள்

2022 வரவு- செலவுத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

பேரூந்து உரிமையாளர்களுக்கான மானியம்