உள்நாடு

ரவி உள்ளிட்டோரை கைது செய்ய இடைக்காலத் தடை

(UTV | கொழும்பு) – பிணை முறி தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் ஆறு பேரை கைது செய்யுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றினால் பிறப்பித்த பிடியாணைக்கு மேன் முறையீட்டு நீதிமன்றில் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி மற்றும் மார்ச் 31 ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறிகள் ஏலத்தின் போது 51.98 பில்லியன் ரூபா முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்தது

ரஞ்சன் அடுத்த வாரம் விடுதலை

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்து