சூடான செய்திகள் 1

ரவிக்கு மீண்டும் நிதியமைச்சு?

(UTV|COLOMBO)-புதிய அமைச்சரவை இன்று (12) அல்லது நாளை (13) நியமிக்கப்படலாம் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ மற்றும் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் புதிய அமைச்சரவைக்கான அமைச்சர்களை நியமித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரவையில் மாற்றங்கள் நிகழாது என பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட போதும் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் பதவியேற்பார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, புதிய அமைச்சரவையில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு மீண்டும் ஒரு அமைச்சுப்பதவி வழங்கப்படவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரவி கருணாநாயக்க மீண்டும் நிதி அமைச்சை தனக்கு வழங்குமாறு வேண்கோள் விடுத்துள்ளதாகவும், ஆனால் சுற்றுலாத்துறை அமைச்சு அல்லது சிவில் விமான போக்குவரத்து அமைச்சு அல்லது இரண்டு அமைச்சுக்களும் வழங்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு இன்று

மாணவர்களுக்கான புலமைப்பரிசிலை இரு மடங்காக அதிகரிக்கத் தீர்மானம்

திங்கள் முதல் 5,000 பஸ்கள், 400 ரயில்கள் சேவையில்