வகைப்படுத்தப்படாத

ரயில் விபத்து – 20 பேர் உயிரிழப்பு

ஒரு நாளில் நூற்றுக்கணக்கான ரயில்கள் வந்துசெல்வதால் இந்த ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

இந்நிலையில், நேற்று மதியம் டீசலால் இயங்கக்கூடிய பயணிகள் ரயில் ஒன்று ரயில் நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்தது. ரயில் நிலையத்தை நெருங்கியபோது, திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ரயில், நிற்காமல் அதிவேகத்தில் சென்றது.

இதையடுத்து ரயில் நிலையத்தின் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு மீது ரயில் கடுமையாக மோதியது. அதனை தொடர்ந்து ரயிலின் டீசல் டேங் வெடித்து தீப்பிடித்தது.

கொழுந்துவிட்டு எரிந்த தீ, ரயில் நிலையத்தின் நடைமேடைகளிலும், அருகில் உள்ள கட்டிடங்களிலும் பரவியது. இதனால் நிலையத்தில் இருந்த பொதுமக்கள் அங்கும்,இங்கும் ஓடினர்.

எனினும் தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர். 40 க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

பாலஸ்தீன் மீது டிரம்ப் பாய்ச்சல்

මගී ප්‍රවාහන බස්රථ සඳහා පනවන දඩය ඉහලට.

Premier says he is opposed to capital punishment