வகைப்படுத்தப்படாத

ரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானதில் 05 பேர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – ஈரான் நாட்டில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 92 பேர் காயமடைந்துள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சுமார் 250 பயணிகளுடன் சென்ற குறித்த ரயில் குரின் மாவட்டத்தின் ஷுரு பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென தடம்புரண்டு கவிழ்ந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அப்பகுதிகளில் வீசும் அதிகப்படியான காற்றினால் தண்டவாளங்கள் மணலால் மூடப்படுகின்றன. இதனால் இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

ரணில் வெளியிட்டுள்ள சொத்து விபரங்களை மக்கள் நம்பமாட்டார்கள்

editor

வானுட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மாலத்தீவின் நிலைமைகளை உன்னிப்பாக அவதானிக்கும் இந்தியா..