உள்நாடு

ரயில் கட்டணமும் அதிகரிக்கிறது

(UTV | கொழும்பு) – ரயில் கட்டணங்கள் தொடர்பில் கொள்கையொன்றை வகுக்க வேண்டுமெனவும், பஸ் கட்டணத்தில் பாதியையாவது புகையிரதங்களுக்கு அறவிட வேண்டும் எனவும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், இதனால் ரயில்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரை இரவு நேரத்தில் அதிவேக புகையிரதத்தை இயக்குவதற்கு கவனம் செலுத்தப்பட்டாலும் எரிபொருளுக்கு மட்டும் 1.3 மில்லியன் ரூபா செலவாகும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

500 ஆசனங்களுக்கு ஒவ்வொரு பயணியிடமும் 2000 ரூபா அறவிடப்பட்டாலும் 1 மில்லியன் ரூபா பெறப்படுவதாகவும் அதற்கமைவாக சுமார் 300,000 ரூபா நட்டத்தை சந்திக்க நேரிடும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக விசேட புகையிரத சேவைகள்

editor

பதினேழு துறைசார் கண்காணிப்புக் குழுக்கள்

எதிர்க்கட்சியின் கோரிக்கைக்கு அரசு இணக்கம்