சூடான செய்திகள் 1

ரயில் கட்டணங்கள் 15 வீதத்தால் திருத்தம்-இதிபொலகே

(UTV|COLOMBO)-தொடரூந்து பணியாளர்களால் கடந்த நான்கு தினங்களாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு நேற்றைய தினம் கைவிடப்பட்ட நிலையில், இன்று காலை முதல் வழமை போன்று தொடரூந்து சேவைகள் இடம்பெறுவதாக தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இதன்படி, இன்று காலை முதல் வழமையான நேர அட்டவணைப்படி அனைத்து தொடரூந்து சேவைகளும் இடம்பெறும் என தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் ரயில் கட்டணங்கள் 15 வீதத்தால் திருத்தப்படவுள்ளன.

அதற்கான வர்த்தமானி அறிவித்தலைத் தயாரித்து, அமைச்சிடம் ஒப்படைத்துள்ளதாக பிரதி வணிக அத்தியட்சகர் என்.ஜே. இதிபொலகே தெரிவித்துள்ளார்.

ரயில்வே தொழிற்சங்கத்தினர் கடந்த 4 நாட்களாக முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பினால், 64 மில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தநிலையில், ரயில்வே தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று

ஜனாதிபதியிடம் சமர்பிக்கப்பட்ட அறிக்கை

பிரேசில் சிறையில் இருந்து தப்ப முயன்ற சில்வா கைது (video)