உள்நாடு

ரயில்வே சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பம்

(UTV | கொழும்பு) – மாகாணங்களுக்குள் மாத்திரம் ரயில்வே சேவைகள் இன்று (25) முதல் மீள ஆரம்பமாகின்றன.

இதற்கமைய 133 ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பருவச் சீட்டினைக் கொண்டவர்களுக்கு மாத்திரம் இன்று (25) முதல் ரயில்களில் பயணிக்க முடியும்.

இதேவேளை, பருவச் சீட்டுத் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காகத் ரயில் நிலையங்களில் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அத்துடன் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான ரயில்வே மற்றும் பேருந்து சேவைகள் என்பன முன்னெடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

மல்வத்து ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன இளைஞரை தேடும் பணி தொடர்கிறது

editor

ஏரோஃப்ளோட் வழக்கு தள்ளுபடி

இலங்கை அணி வீரர்கள் பணத்துக்காகவே விளையாடுகின்றனர் -அதாங்கத்தில் முரளி.