சூடான செய்திகள் 1

ரயில்வே ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS|COLOMBO) – ரயில்வே தொழிற்சங்கங்கள் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளன.

தமது சம்பள பிரச்சினைக்கு அரசாங்கம் தீா்வு வழங்கும் வரை தொடர்ந்து இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டாளா்கள் சங்கத்தின் செயலாளா் மனுர பீாிஸ் தொிவித்துள்ளாா்.

குறித்த இந்த பணிப்புறக்கணிப்பில் ரயில்வே நிலைய அதிபா்கள், கட்டுப்பாட்டாளா்கள், நிா்வாகத்தினா், கண்காணிப்பாளா்கள் மற்றும் சாரதிகளும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை ரயில்வே தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

டி.பி ஏக்கநாயக்க நிதிக்குற்ற விசாரணை பிரிவில் ஆஜர்

UPDATE-ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளது

சீரற்ற காலநிலையால் நோய்கள் பரவும் அபாயம்