உள்நாடு

ரயிலிலிருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

பெம்முல்ல ரயில் நிலையத்திற்கு அருகில் பயணி ஒருவர் ரயிலிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

கொழும்பு புறக்கோட்டையில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த ரயிலில் இருந்தே அவர் நேற்று மாலை தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக நேற்று காலையும் மாலையும் சில ரயில் சேவைகளே முன்னெடுக்கப்பட்டன.

அவற்றில் பெருமளவான பயணிகள் கடும் நெரிசலுக்கு மத்தியில் பயணித்து வரும் நிலையிலேயே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

கொரோனா ஒழிப்பு செயற்பாடு – சுகாதார பரிசோதகர்கள் விலகல்

காலியில் 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

இன்று முதல் புதிய பேரூந்து கட்டணங்கள் அமுலுக்கு