உள்நாடு

ரம்புக்கனை சம்பவம் : பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும்

(UTV | கொழும்பு) – ரம்புக்கன பொலிஸ் பகுதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சளார் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

ரம்புக்கனையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக நேற்றைய தினம் (19) பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் போது ஒரு குழுவினர் எரிபொருள் பவுசருக்கு தீவைக்க முற்பட்ட போது பொலிசார் குறைந்தபட்ச பலத்தையே பயன்படுத்த நேரிட்டதாக பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்திருந்தார்.

பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார், 24 பேர் காயமடைந்தனர்.

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (19) அதிகாலை 1.30 மணியளவில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

Related posts

ஜனாதிபதி, சீனாவிற்கு விஜயம்!

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்

 தபால் மூல வாக்களிப்பு தொடர்பான தகவல்