உள்நாடு

‘ரத்மலானை ரொஹா’ உயிரிழப்பு

(UTV | கொழும்பு) – பாதாளக் குழு குற்றச் செயல்கள் மற்றும் ஹெரோயின் கடத்தல் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரான ‘ரத்மலானை ரொஹா’ என்ற ரோஹன டி சில்வா, இன்று(24) அதிகாலை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த போதே நீர்கொழும்பு கொச்சிக்கடை – பகுதியில் மறைந்திருந்த போதே மேல் மாகாணத்தின் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரிடமிருந்து T 56 ரக துப்பாக்கி மற்றும் ரிவோல்வரும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

டிசம்பருக்குள் காணிகள் விடுவிக்கப்படும் – பவித்திரா வன்னியராச்சி.

2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் 43 வாக்குகளால் நிறைவேற்றம்

கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் : இன்றும் விசாரணைக்கு