சூடான செய்திகள் 1

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான ஒன்றிணைந்த எதிர்கட்சியின் அதிரடி நடவடிக்கைகள் ஆரம்பம்

(UTV|COLOMBO)-பிரதமர் ரணில் விக்ரம சிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கையொப்பம் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.

ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் கொண்டுவரப்படவுள்ள குறித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் பெறும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் விஜயராமவில் இன்று முற்பகல் ஒன்று கூடிய ஒன்றிணைந்த எதிர்கட்சியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஆலோசனை நடத்திய பின்னர் கையொப்பம் பெறும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் ஆதரவினையும் பெற்றுக்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்தார்.

கையொப்பங்களை பெற்றுக்கொள்வதற்காக ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் தற்பொழுது நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்துள்ளனர் எனவும், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா குறிப்பிட்டார்.

பிரதமர் ரணில்விக்ரமசிங்கவிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை உள்ளடகியவாறு தயாரிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் பெரும்பாலானோரின் கையொப்பம் பெற்றுக்கொண்டதன் பின்னர் அடுத்த வாரத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்கு 480 மில்லியன் டொலர் நிதியுதவி

மருத்துவர்களை சீண்டும் கிழ்க்கு ஆளுநர் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு

ஜெனிவாவிற்கு பிரதிநிதிகளை அனுப்பும் ஜனாதிபதி…