அரசியல்உள்நாடு

ரணில் விக்கிரமசிங்க வியாழக்கிழமை விசேட உரை

முன்னாள் ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை (17) விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

2024 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக உரையாற்றுவது இதுவே முதல் தடவையாகும்.

இதன்போது, நாட்டின் தற்போதைய அரசியல் நடத்தை மற்றும் எதிர்காலத் திட்டங்களை குறித்து ரணில் விக்கிரமசிங்க வெளிப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரணில் விக்கிரமசிங்க பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனவும் தேசிய பட்டியலிலிருந்து பாராளுமன்றத்திற்கு வருவதில்லை எனவும் தீர்மானித்துள்ள நிலையில், பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணிக்கு தலைமை தாங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொவிட்-19 : மத்திய கிழக்கு நாடுகளில் 23 இலங்கையர்கள் பலி

வடிவேல் சுரேசுக்கு – ஜீவன் தொண்டமான் வாழ்த்து!

இன்று முதல் இலங்கை வரும் விமானங்களுக்கு தடை