சூடான செய்திகள் 1

ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் பிரதமர் பதவியினை வழங்க ரிஷாத் பதியுதீன் ஆதரவு

(UTV|COLOMBO)-ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக நிரூபிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியினால் கொண்டுவரவுள்ள பிரேரணைக்கு தமது கட்சி ஆதரவு வழங்கும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி பறிபோன ஜனநாயகத்தை மீண்டும் நிலைநிறுத்துவது அவசியமாகும். அதேபோன்று, நீக்கப்பட்ட சட்ட ரீதியிலான அமைச்சரவையை மீண்டும் செயற்படச் செய்வது அவசியமாகும் எனவும் அக்கட்சியின் தலைவர் ரிஷாட் பத்தியுத்தீன் கூறியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவை நிரூபிக்கும் வகையிலான பிரேரணை பாராளுமன்றத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

ஸஹ்ரான் ஹாசிமின் மடிக்கணினி மீட்பு – பொலிஸ்

நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது

ஹெரோயினுடன் ஒருவர் கைது…