அரசியல்உள்நாடு

ரணில் மாமா விற்பனை செய்கின்ற போது அநுர மருமகன் அமைதி காக்கிறார் – சஜித்

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கான அடிப்படைச் சம்பளத்தை அடுத்த வருடம் முதல் 24% அதிகரிப்போம். இந்த வேலை திட்டத்தின் ஊடாக அடிப்படைச் சம்பளம் 57 500 ரூபாவாக அமையும். தற்போது சாதாரணமாக அரச ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற வாழ்க்கைச் செலவு 17,500 வில் இருந்து 25 ஆயிரம் ரூபா வரை அதிகரிப்போம். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியின் மோசமான வரி சூத்திரத்தினால் சிக்குண்டு 6 – 36% வரை வரி செலுத்திக் கொண்டிருக்கின்ற மக்களுடைய வரிச் சுமையை ஒன்று தொடக்கம் 24 வீதம் வரை குறைப்போம் என எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

அத்தோடு அனைத்து அரச நிறுவனங்களின் இருப்பு குறித்தும் கவனிக்கப்பட வேண்டியதோடு, இந்த நிறுவனங்களை முன்னெடுத்துச் செல்வது குறித்தும் கவனிக்கப்பட வேண்டும். அத்தோடு இந்த நிறுவனங்களுடைய பாதுகாப்புத் தன்மையும் உறுதிப்படுத்தப்படும்.

அந்த நிறுவனங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு அது வலுப்படுத்தப்படுகின்ற போது, அந்த நிறுவனங்களில் சேவை செய்கின்ற ஊழியர்களின் உரிமையும் பாதுகாக்கப்படுகின்றது. எனவே அரச நிறுவனங்களில் தொழில் புரிகின்ற அரச ஊழியர்களின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்வது தனது கொள்கை திட்டத்தில் ஒன்று என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இலாபமடைகின்ற நிறுவனங்களை மேலும் அதிக அளவில் இலாபமிக்கக்கூடிய நிறுவனங்களாக முகாமைத்துவப்படுத்துவதோடு, நட்டத்தில் இயங்குகின்ற நிறுவனங்களை இலாபமடையக்கூடிய நிறுவனங்களாக மாற்ற வேண்டும்.

இந்த நிறுவனங்களில் சேவையாற்றுகின்ற ஊழியர்களின் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் தொழிற்சங்கங்களின் தேசிய மாநாடு இன்று (12) கொழும்பில் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பல்வேறு தொழில்களோடு சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பெருந்தொகையானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போதைய ஜனாதிபதி உள்ளிட்ட நிர்வாக குழுவிற்கு அரச நிறுவனங்கள் இலாபம் அடைகின்ற நிறுவனங்களை காண முடியாதுள்ளது. டெலிகோம், லிட்டோ கேஸ், ஸ்ரீலங்கன் கேட்டரின், காப்புறுதிக் கூட்டுத்தாபனம் போன்ற நிறுவனங்களை விற்பனை செய்ய முயற்சிக்கின்றனர்.

இதற்கு எதிராக பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியே குரல் எழுப்பியது. சிவப்பு சகோதரர்கள் வாய் மூடி மௌனமாக இருந்தார்கள். இவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்று அனுபவித்துக் கொண்டிருந்தமையால் தொழிலாளர்களுக்காக எழுப்பிய குரல் மெளனிக்கப்பட்டு இருக்கிறது. டெலிகோம், லிட்ரோ, காப்புறுதி கூட்டுத்தாபனம் போன்ற இலாபமடைகின்ற நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தது ஐக்கிய மக்கள் சக்தியே என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

ரணில் மாமாவும் அநுர மருமகனும் இப்பொழுது ஒரே பக்கத்தில்.

ரணில் மாமாவும், அனுரா மருமகனும் தற்பொழுது ஒரே பக்கத்திற்கு சென்று இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளார்கள். இந்த ஒப்பந்தம் நாட்டை கட்டி எழுப்புகின்ற ஒப்பந்தம் அல்ல, தம்மை தோல்வி அடையச் செய்கின்ற ஒப்பந்தம். சுத்தமான இந்த அரசியல் பயணத்தில் இலட்சக்கணக்கான அரச ஊழியர்களின் வாழ்க்கைக்கான பதில் 21 ஆம் திகதி தமக்கு கிடைக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டிற்கு இலாபமாக அமையும் நேர்மறையான இணைப்பை உருவாக்குவோம். ஐக்கிய மக்கள் சக்தி என்பது முதலாளித்துவ கட்சியோ அல்லது சோசலிச கட்சியோ அல்ல. ஜனநாயக சமூக சந்தைப் பொருளாதார நடுத் தரப்பாதை கொள்கையை பின்பற்றுகின்ற ஒரு கட்சியாகும். இதன் ஊடாக இந்த நாட்டின் அரச நிறுவனங்களை இலாபம் அடைகின்ற நிறுவனங்களாகவும் ஊழியர்களின் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், நிறுவனங்கள் நாட்டுக்கு நட்டத்தை ஏற்படுத்தாத வகையிலும் நாட்டுக்கு இலாபத்தை ஈட்டி கொடுக்கின்ற நேர்மறையான இணைப்பை ஏற்படுத்துகின்ற வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம் என்றும் எதிர்க்கட்சித்தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

நாட்டை ஏல விற்பனை மையமாக இடுமளிக்க முடியாது.

நட்டத்தில் இயங்குகின்ற நிறுவனங்களை இலாபமடையச் செய்ய தேவையான அளவுக்கு திட்டங்களும் முறைகளும் உண்டு. நட்டத்தில் இயங்குகின்ற போது வரி செலுத்துகின்ற மக்களின் பணத்தை வழங்க முடியாவிட்டாலும் அரச நிறுவனங்களை ஏலத்தில் விடுவதில்லை. எமது நாட்டை ஏல விற்பனை நிலையமாக மாற்றுவதில்லை. தற்போதைய ஜனாதிபதிக்கு தபால் நிலையத்தையும் காண முடியாது. நுவரெலிய மற்றும் காலி தபால் நிலையங்களை விற்பனை செய்ய முயல்கின்றார். எமக்கானது என்ற தன்மை இல்லாத ஒரு ஜனாதிபதியே இருக்கின்றார் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரச ஊழியர்களை துரத்துகின்ற கொள்கை எம்மிடம் இல்லை.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகின்ற இந்த காலத்தில் தான் அரச ஊழியர்களுடைய சம்பளப் பிரச்சினையை ஜனாதிபதி விளங்கிக் கொண்டுள்ளார். இந்த ஏமாற்றுக்களுக்கு மாட்டிக்கொள்ள வேண்டாம். அரச ஊழியர்களை விரட்டுகின்ற கொள்கை எம்மிடம் இல்லை. அரச நிறுவனங்களை காப்பாற்றி, நட்டத்தில் இயங்குகின்ற நிறுவனங்களை இலாபம் அடைகின்ற நிறுவனங்களாக மாற்றுகின்ற வேலைத்திட்டத்திற்கு செல்வோம் என எதிர்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்களுக்காக நாம் முன் நிற்போம்.

அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளான பெருந்தகையானோர் இருக்கின்றார்கள். 2019 க்கு பின்னர் 40,000 பேரும் அதற்கு முன்னர் 60,000 பேரும் உள்ளார்கள். இவர்களுடைய பிரச்சினையை தீர்ப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவினால் முடியாமல் போயுள்ளது எனவே இவர்களுக்காக நான் முன் நிற்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

Related posts

எதிர்வரும் ஒரு வார காலம் மிகவும் கடுமையானதாக இருக்கும் – அனில் ஜாசிங்க

டிசம்பருக்குள் காணிகள் விடுவிக்கப்படும் – பவித்திரா வன்னியராச்சி.

இலங்கையில் மற்றுமொருவருக்கு கொரோனா உறுதி [VIDEO]