கிசு கிசு

ரணிலுக்கு விழுந்தது ஆப்பு

(UTV|COLOMBO) – இலங்கை மத்திய வங்கியின் கணக்காய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக அமைந்துள்ளது முன்னாள் பிரதமரின் கைது என கூறப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடிகளுக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே பிரதான பொறுப்பாளி என குறித்த் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ரணில் உட்பட முன்னாள் அமைச்சர்களான கபீர் ஹாஷிம் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோரும் அந்த அறிக்கையில் பொறுப்பு கூறுபவர்களாக பெயரிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் உள்ளகத் தகவல் குறிப்பிடுகின்றன.

கடந்த 2015ஆம் ஆண்டில் 100 கோடி ரூபா பெறுமதியான பிணைமுறிகளை வழங்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்திருந்தது. ஆயினும் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அப்போதைய அமைச்சர்களான மலிக் மற்றும் கபிர் ஆகியோர் இணைந்து 1000 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய ஆலோசனை வழங்கியதாக கோப் குழுவுக்கு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் சாட்சியமளித்திருப்பதையும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் நிதியமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்கவின் பெயர் மத்திய வங்கியின் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் பிணைமுறி மோசடி இடம்பெற்ற காலகட்டத்தில் மத்திய வங்கியானது அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கீழே இருந்தமையே இதற்கு காரணமெனவும் கூறப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதி – பிரதமருக்கு இடையில் கடும் வாய்த்தர்க்கம்

ஹெலிகாப்டரில் இருந்து குதித்து சைக்கிள் சாகசம்

இந்தோனேசியாவில் மலர்துள்ள பிணமலர்.