கிசு கிசு

ரணிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு FCID யில் முறைப்பாடு-பொதுபலசேனா அமைப்பு

(UTV|COLOMBO)-ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நிதி மோசடி விசாரணனைப் பிரிவில் முறையிடப்பட்டுள்ளதாக பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒரு வாரத்துக்கு முன்னர் பிரதமர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் அலரிமாளிகையில் தங்கி இருப்பதானது, அரச சொத்தை முறைக்கேடாக பயன்படுத்தும் காரியம் எனவும், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தமது அமைப்பு நிதி மோசடி விசாரணனைப் பிரிவில் முறைப்பாட்டு செய்துள்ளதாகவும் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கையின் இறைமையில் பிரித்தானியாவின் தலையீடு அநாவசியமானது எனத் தெரிவித்து இன்று முற்பகல் கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தில் மனு ஒன்றையும் கையளித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ரணில் விக்ரமசிங்கவே இன்னும் இலங்கையின் பிரதமராக பிரித்தானியா அங்கீகரிக்கும் என்று அண்மையில் அந்த நாட்டின் பாராளுமன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையிலேயே பொதுபலசேனா அமைப்பு இந்த கோரிக்கையை விடுத்திருக்கிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தஹமுக்கு போட்டியாக சமிந்த்ராணி

இங்கிலாந்து அணியிடம் இந்தியா வேண்டுமென்றே தோற்றதா? சர்ப்ராஸ் கருத்து

தேம்பி, தேம்பி அழுத இளம் பெண்-காரணம் இதுவா?