சூடான செய்திகள் 1

ரணிலுக்கு ஆதரவாக பாராளுமன்றில் இன்று முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கைப் பிரேரணை

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவிக்கும் நம்பிக்கைப் பிரேரணை ஒன்று இன்று பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.

அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாசவினால் இந்த பிரேரணை பாராளுமன்றில்  முன்வைக்கப்படும்.

இதற்கு ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கின்ற அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவிக்கவுள்ளன.

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இதற்கு ஆதரவளிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த பிரேரணையை ஜேவிபி ஆதரிக்காது என்று ஜே.வீ.பியின் பாராளுமன்ற  உறுப்பினர் நளின்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

Related posts

காட்டு யானைத் தாக்குதலில் பெண் ஒருவர் பலி

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் 30 தொழிற்சங்க நடவடிக்கையில்…

ஹஜ் யாத்திரைக்கு சென்ற 2 இலங்கையர்கள் மரணம்!