முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த பாதீட்டை சற்று மாற்றியமைத்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இம்முறை பாதீட்டை முன்வைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் மக்கள் விடுதலை முன்னணி நடந்து கொண்ட விதத்திற்காக மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் எனக் கூறினார்.
கடந்த 76 வருட சாபம் எனத் தெரிவிக்கும் மக்கள் விடுதலை முன்னணி சாபம் ஏற்படுவதற்கு வழிவகுத்தது என்பதை மறந்து விடக்கூடாது எனக் கூறினார்.
பாராளுமன்றத்தில் இன்று (19) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் நாட்டில் முன்னெடுக்கப்படவிருந்த ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் முதலீடுகள் மக்கள் விடுதலை முன்னணியின் போராட்டங்கள் காரணமாகவே கைவிடப்பட்டதாக கபீர் ஹாஷிம் சுட்டிக்காட்டினார்.
வீடியோ