அரசியல்உள்நாடு

ரணிலின் சின்னத்தை வௌிப்படுத்தி பேரணி – 6 பேர் கைது

சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வாக்குச் சின்னத்தை வௌிப்படுத்தி தேர்தல் பேரணியொன்றை முன்னெடுத்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான தேர்தல் பிரசாரம் எனத் தெரிவித்து புதுக்குடியிருப்பு பொலிஸார் அவர்களை நேற்று (08) கைது செய்தனர்.

இதேவேளை, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்ரி பண்டார தென்னகோன் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் உட்பட சுமார் 100 பேர் கொண்ட கட்சி உறுப்பினர்கள் நேற்று தம்புள்ளை நகரில் துண்டுப்பிரசுர விநியோகத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பின்னர், தேர்தல் விதிமீறல் எனக் கூறி பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் சம்பந்தப்பட்ட குழுவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related posts

இன்றே UTV NEWS ALERT இனை செயற்படுத்த..

கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கிய அநுராதபுர நகரம்

editor

தொடர்ந்து பெய்து வரும் மழை – மண்சரிவு அபாய எச்சரிக்கை

editor