உள்நாடு

ரணிலின் கேள்விகளுக்கு தட்டுத்தடுமாறிய பசில்

(UTV | கொழும்பு) – இன்று நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை பல தடவைகள் கோரிய போதும் அது கிடைக்கவில்லை என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த நிதியமைச்சர், சர்வதேச நாணய நிதியத்தினால் வெளியிடப்பட்ட முழுமையான அறிக்கை கிடைக்கப்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பான தனது அறிக்கையை வெளியிட்டுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இருவருக்குமிடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றதுடன், சர்வதேச நாணய நிதியத்தினால் வெளியிடப்பட்ட வரைவு மாத்திரமே தனக்கு கிடைத்துள்ளதாக நிதியமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகள் மற்றும் முன்மொழிவுகளை கண்டறிவதற்காக இந்த சர்வகட்சி மாநாடு அழைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

  • ஆர்.ரிஷ்மா 

Related posts

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுவுக்கு தமிழ் இளைஞர்கள் நியமனம்!

மின்சார வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி – வரி வருமானம் அதிகரிப்பு

தனிமைப்படுத்தலுக்கு மேலும் 30 பேர் அனுப்பிவைப்பு