சூடான செய்திகள் 1

ரஞ்சித் சொய்சா உள்ளிட்ட நால்வருக்குப் பிணை

(UTV|COLOMBO)-ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எம்.பியான ரஞ்சித் டி சொய்சா, எம்.பி உள்ளிட்ட நால்வர் பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களான அந்த நால்வரும், கொடக்கவெல நகரத்தில் வைத்து, கடந்த 16ஆம் திகதியன்று நபரொருவரை தாக்கினாரென, கொடக்கவெல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டொன்று செய்யப்பட்டிருந்தது.

அந்த முறைப்பாட்டுக்கமை, கடந்த 20 ஆம் திகதி  கைதுசெய்யப்பட்ட நால்வரும், பெல்மதுளை நீதவான் நீதிமன்றத்தில் ​அன்றையதினமே, ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போதே, அவர்கள் ஐவரையும் எதிர்வரும் 1ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

எனினும், இன்று (28) தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை ஆராய்ந்த நீதவான் அந்த ஐவருக்கும் பிணை வழங்கினார்.

 

 

 

 

 

Related posts

83 ஆயிரம் லீட்டர் கள்ளுடன் ஒருவர் கைது

மொரட்டுவை – கட்டுபெத்த விகாரையில் உள்ள இரண்டு மாடி கட்டிடமொன்றில் தீப்பரவல்

இலங்கைக்கான பயணத்தடை நீக்கியது ஐ.அரபு இராச்சியம்