சூடான செய்திகள் 1

ரஞ்சன் மீதான விசாரணைகள் ஒத்திவைப்பு

(UTVNEWS | COLOMBO) -இராஜங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த வழக்கின் சாட்சிதாரரான தனியார் ஊடகம் ஒன்றின் பணிப்பாளிரிடம் சாட்சி விசாரணைகள் இடம்பெற்றது.

குறித்த வழக்கின் பிரதிவாதியான இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி இருக்கவில்லை என்பதுடன் அவர் உயர் தர பரீட்சை எழுதுவதற்காக இதற்கு முன்னர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றிருந்தார்.

Related posts

ஜூலை 03 வரை கோட்டாவை கைது செய்ய தடை

பெறுபேறுகளை எதிர்பார்த்துள்ள மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வழிகாட்டல் – அரவிந்த குமார்

ரயில் பணிப்புறக்கணிப்பு – இன்று விசேட அமைச்சரவைக் குழுக் கலந்துரையாடல்