உள்நாடு

ரஞ்சன் : பா.உ பதவி எதிர்வரும் 06 மாதங்களில் இரத்தாகும்

(UTV | கொழும்பு) – நான்கு வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி சட்ட ரீதியாக எதிர்வரும் 06 மாதங்களில் இரத்தாகும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குற்றச்செயலுக்காக குறைந்தபட்சம் 2 வருடங்களுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அதில் 06 மாதங்களுக்கு மேல் தண்டனை அனுபவிக்கும் பட்சத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பதவி சட்டரீதியாக இரத்தாகும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹோவா குறிப்பிட்டார்.

எனினும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 6 மாதங்களுக்குள் தண்டனையை இடைநிறுத்தினால் பாராளுமன்ற உறுப்பினருக்கான பதவி நீக்கப்படாது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஊரடங்கு உத்தரவை மீறிய 302 பேர் கைது

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு ஆதரிக்கமாட்டோம் – ரிஷாட்!

தடுப்பு முகாம்களில் இருந்து மேலும் 300 பேர் வீட்டுக்கு