உள்நாடுசூடான செய்திகள் 1

ரஞ்சன் குரல் பதிவு; அறிக்கை தருமாறு உத்தரவு

(UTVNEWS | COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் பெற்றுக் கொள்ளப்பட்ட தொலைப்பேசி குரல் பதிவுகளின் பிரதிகள் மற்றும் தரவுகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை பெற்றுக் தருமாறு அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 4 ஆம் திகதி பிற்பகல் 3 மணி அளவில் சென்ற மேல் மாகாண தென் பிராந்திய குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்ற தேடுதல் ஆணையின் படி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் மாதிவெலயில் அமைந்துள்ள வீட்டுக்கு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, அனுமதிப்பத்திரம் காலாவதியாகியிருந்த நிலையில் பிஸ்டல் ஒன்றும் மேலும் சில இறுவட்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.

அதன்படி, காலாவதியான பிஸ்டல் ஒன்றை வைத்திருந்தமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டார்.

பின்னர், 5 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணையிலும் வௌிநாடு செல்ல தடை விதித்தும் ரஞ்சன் ராமநாயக்க விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், ஊடகங்களில் வௌியாகியுள்ள ரஞ்சன் ராமநாயக்க வெவ்வேறு நபர்களுடன் மேற்கொண்ட தொலைப்பேசி உரையாடல்கள் குறித்த குரல் பதிவுகள் தொடர்பில் கொழும்பு குற்றவியல் பிரிவால் நேற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

திருமணத்தில் நடனமாடிய  யுவதி மரணம் 

கஞ்சிப்பானை இம்ரான் தொடர்ந்தும் விளக்கமறியலில்

பெரிய வெங்காயத்திற்கு அறவிடும் விசேட பண்டங்களுக்கான வரி அதிகரிப்பு